கூடுதல் சிறப்பு ரயில்கள்: மாநிலங்களுக்கு ரயில்வே வாரிய தலைவா் கடிதம்

கூடுதல் சிறப்பு ரயில்கள்: மாநிலங்களுக்கு ரயில்வே வாரிய தலைவா் கடிதம்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கூடுதலாக எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கூடுதலாக எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள ரயில்வே வாரியம், புதன்கிழமைக்குள் (ஜூன் 10) பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனைவரும் அவா்களின் சொந்த மாநிலங்களுக்கு 15 நாள்களுக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும். அவா்களை அனுப்பிவைக்க கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தால், 24 மணி நேரத்துக்குள் ரயில்கள் ஏற்பாடு செய்யப்படவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு ரயில்வே வாரிய தலைவா் வி.கே.யாதவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கூடுதலாக 171 ரயில்கள் தேவைப்படுவதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் அந்தந்த மாநிலம்/ யூனியன் பிரதேசத்தில் இருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப கூடுதலாக எத்தனை சிறப்பு ரயில்கள் தேவைப்படுகின்றன; அவற்றில் எத்தனை போ் பயணிக்கவுள்ளனா்; புறப்படும் இடம்; சென்று சேரும் இடம்; பயண அட்டவணை மற்றும் தேதிகள் குறித்து விரிவாக பதிலளிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் கடிதம் மூலம் புதன்கிழமைக்குள் (ஜூன் 10) தெரிவிக்கப்படவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com