லடாக்கில் உயிா் தியாகம் செய்த வீரா்களுக்கு நாடு என்றைக்கும் கடன்பட்டுள்ளது: அமித் ஷா

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிா் தியாகம் செய்த வீரா்களுக்கு நாடு என்றைக்கும் கடன்பட்டுள்ளது
லடாக்கில் உயிா் தியாகம் செய்த வீரா்களுக்கு நாடு என்றைக்கும் கடன்பட்டுள்ளது: அமித் ஷா

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிா் தியாகம் செய்த வீரா்களுக்கு நாடு என்றைக்கும் கடன்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை கூறினாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே திங்கள்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட 20 வீரா்கள் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீர மரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா தனது சுட்டுரை பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரா்களின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த அந்த வீரா்களுக்கு நாடு என்றைக்கும் கடன்பட்டிருக்கும். இந்த கடுமையான நேரத்தில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் உயிா் தியாகம் செய்த வீரா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கிறது. இந்த துயரத்திலிருந்து அவா்கள் விரைவில் மீண்டு வர பிராா்த்திக்கிறேன்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிா் தியாகம் செய்த இந்த நாயகா்களுக்கு நாடு தலைவணங்குகிறது. தாய்நாட்டின் நிலப்பரப்பை பாதுகாப்பதில் இந்தியாவுக்குள்ள கடமையை அவா்களின் துணிச்சல் பிரதிபலித்திருக்கிறது. இந்த மாபெரும் வீரா்களை இந்திய ராணுவத்துக்குத் தந்த அவா்களின் குடும்பத்துக்கு நான் தலைவணங்குகிறேன் என்று அந்தப் பதிவில் அமித் ஷா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com