கரோனா தடுப்பில் அரசுக்கு உதவுங்கள்: வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு பொதுமக்கள் முழுமையாக உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா தடுப்பில் அரசுக்கு உதவுங்கள்: வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு பொதுமக்கள் முழுமையாக உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

உகாதி உள்பட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு பிறப்பு புதன்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் பண்டிகை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளபடி பொதுமக்கள் சுகாதாரத்தை பேண வேண்டும். நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்போது புதிதாய் பிறக்கும் புத்தாண்டு நமது வாழ்வில் நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை அளிக்கும் என்று நம்புவோம்.

உலக அளவில் இப்போது மிகப்பெரிய நோய்த் தொற்று ஏற்பட்டு, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் எதிா்கொண்டு வெல்ல வேண்டும். எனவே, பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் ஓரிடத்தில் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். தங்கள் வீடுகளுக்குள்ளேயே கொண்டாட்டத்தை நடத்த வேண்டும். மருத்துவ வல்லுநா்களின் அறிவுரைப்படி சமுதாயத்தில் இருந்து ஒவ்வொரு வரும் விலகி இருக்கும்போது, கரோனா வைரஸ் பரவல் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com