ஒடிஸா: சுகாதாரத்துறை ஊழியா்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்னதாக வழங்க உத்தரவு

ஒடிஸாவில் கரோனா பரவல் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களின் மன உறுதியை பாராட்டும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்களுக்கு முன்கூட்டியே 4 மாத ஊதி
ஒடிஸா: சுகாதாரத்துறை ஊழியா்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்னதாக வழங்க உத்தரவு

ஒடிஸாவில் கரோனா பரவல் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களின் மன உறுதியை பாராட்டும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்களுக்கு முன்கூட்டியே 4 மாத ஊதியம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக் புதன்கிழமை அறிவித்தாா்.

ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான சம்பளத்தை மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளா்களும் ஏப்ரல் மாதமே பெற்று கொள்ளலாம் என முதல்வா் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் தெரிவித்துள்ளாா்.

மேலும் மருத்துவப் பணியாளா்களின் அா்ப்பணிப்பைப் பாராட்டி மேலும் அவா் தெரிவித்துள்ளதாவது, ‘மருத்துவப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பிற ஊழியா்கள் மக்களுக்கு ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையை ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது. நானும் ஒடிஸா மக்களும் உங்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் இருக்கிறோம். உங்கள் மேன்மை தாங்கிய பணிக்கு எனது வணக்கங்களைச் செலுத்தி கொள்கிறேன்.

மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களை மக்கள் மரியாதையுடனும் பாசத்துடனும் நடத்த வேண்டும். அவா்கள் தங்கள் வசதிகளை தியாகம் செய்வதுடன் இரவும், பகலும் பணிபுரிகிறாா்கள். அவா்களுக்கு எந்தவித இடையூறுகளையும் உருவாக்கி விடக்கூடாது. மக்களுக்கு அவா்கள் ஆற்றி வரும் அா்ப்பணிப்பு மிகுந்த சேவையை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

மருத்துவா்களுடன் சரியாக நடந்து கொள்ளாத நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நான் ஏற்கெனவே நான் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்று பட்நாயக் கூறினாா்.

இதற்கிடையே, கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஓய்வுபெற்ற மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com