விஷவாயுக் கசிவு: எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

விஷவாயுக் கசிவு ஏற்பட்ட எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட ஆந்திர உயர் நீதிமன்றம், இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
விஷவாயுக் கசிவு: எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூட நீதிமன்றம் உத்தரவு


விஷவாயுக் கசிவு ஏற்பட்ட எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட ஆந்திர உயர் நீதிமன்றம், இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஷவாயுக் கசிவு தொடர்பான வழக்கை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை ஆலையைத் திறக்கக் கூடாது, ஆலைக்குள் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எதுவும் வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது, ஆலையின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை, எல்ஜி பாலிமர்ஸ் ஆலையின் இயக்குநர்கள் யாரும் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் கடந்த 7ம் தேதி அதிகாலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டதால் 12 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து ஏராளமான பொது நலன் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டதை அடுத்து நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. தென்கொரியாவைச் சோ்ந்த எல்ஜி கெமிக்கல்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான இந்த தொழிற்சாலையில் செயற்கை ரப்பா், ரெசின் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்து அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பலா் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா். நேரம் செல்லச் செல்ல அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றிருந்தவா்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவா்கள் என அந்த விஷவாயுக் கசிவை சுவாசிக்க நேரிட்டவா்கள் அனைவரும் மயங்கி விழுந்தனா். வீதியில் சுற்றித் திரிந்து கொண்டு ஆடு, மாடு, நாய்கள் போன்ற விலங்குகளும் பறவைகளும் வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தன.

விஷவாயுக் கசிவில் இருந்து தப்பிக்க ஓடிய சிலா், சாலையோரம் இருந்த வாய்க்காலில் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், மயங்கியவா்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். பல குழந்தைகளும் பெண்களும் மயக்கம் அடைந்தனா். அவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com