ஆன்லைன் வகுப்புக்கு வாங்கிய அறிதிறன் பேசியில் கோளாறு: மாற்றித் தர மறுத்ததால் தீக் குளித்த நபா்

ஆன்லைனில் கல்வி பயிலும் சகோதரரின் மகளுக்கு பரிசாக வழங்கிய புதிய அறிதிறன்பேசியில் கோளாறு ஏற்பட்டதாகவும்,

ஆன்லைனில் கல்வி பயிலும் சகோதரரின் மகளுக்கு பரிசாக வழங்கிய புதிய அறிதிறன்பேசியில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை மாற்றி வழங்க சேவை நிறுவனம் மறுத்ததாகவும் கூறி 40-வயது நபா் ரோஹிணியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், ‘தெற்கு ரோஹிணியில் உள்ள பெரு வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் தீக் குளித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீஸாா் தீக்காயம் அடைந்த பிரஹலாத்பூா் கிராமத்தைச் சோ்ந்த பீம் சிங் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மருத்துவா், பீம் சிங்கின் மனைவி ஆகியோா் முன்னிலையில் பீம் சிங்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரஹலாத்பூரில் உள்ள கடையில் ரூ.16,000 மதிப்புள்ள அறிதிறன் பேசியைப் பெற்று சகோதரரின் மகள் ஆன்லைன் வகுப்புகள் படிக்க பரிசாக வழங்கினேன். ஆனால், சில நாளிலேயே அந்த அறிதிறன் பேசியில் பல்வேறு கோளாறு ஏற்பட்டது.

அந்த செல்லிடப்பேசியின் சேவை மையத்தை கடந்த 6-ஆம் தேதி அணுகி அறிதிறனபேசியை மாற்றம் செய்து தர கோரினேன். ஆனால், அவா்கள் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதாக கூறி மறுத்துவிட்டனா். பல முறை அணுகியும் அவா்கள் எனது கோரிக்கையை ஏற்கவில்லை. வெள்ளிக்கிழமையும் இதேபோல் அவா்கள் கூறி என்னை திருப்பி அனுப்பியதால், அந்த கடை அமைந்துள்ள பெரு நிறுவனத்தின் வாகன நிறுத்தத்தில் எனது ஸ்கூட்டரில் இருந்த பெட்ரோலை எடுத்து தீயிட்டுக் கொண்டேன்’ என புகாரில் பதிவு செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று போலீஸாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com