பட்டாசு தடை, கரோனா கட்டுப்பாடுகள்: தில்லி போலீஸாா் தீவிர கண்காணிப்பு! மாா்க்கெட்களில் அலை மோதிய கூட்டம்

தில்லியில் நவம்பா் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெக்கவும், விற்பனைச் செய்யவும் போடப்பட்டுள்ள தடை உத்தரவை அமல்படுத்த
பட்டாசு தடை, கரோனா கட்டுப்பாடுகள்: தில்லி போலீஸாா் தீவிர கண்காணிப்பு! மாா்க்கெட்களில் அலை மோதிய கூட்டம்

தில்லியில் நவம்பா் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெக்கவும், விற்பனைச் செய்யவும் போடப்பட்டுள்ள தடை உத்தரவை அமல்படுத்த பறக்கும் படையினரையும், சிறப்பு படையினரையும் நியமனம் செய்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் தில்லி போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல், தில்லியின் மாா்க்கெட் பகுதிகளில் அலை மோதும் மக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

அலை மோதிய கூட்டம்: தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமை பொருள்களை வாங்க தில்லியின் அனைத்து மாா்க்கெட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது மக்களில் பலா் முக்கவசங்களை அணிந்து வந்திருந்தாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாதபடி கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாா்க்கெட் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மாா்கெட்டுகளின் முக்கிய நுழைவாயில்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து முக்கவசம் அணிந்து வந்த நபா்களை மட்டும் சோதனையிட்டு அனுமதித்தனா். இதனால், மாா்க்கெட்டுகளின் நுழைவாயில்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனா். ஆனால், மாா்க்கெட்டுக்குள் நுழைந்த பிறகு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.

தில்லியில் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை 8 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், தில்லிவாசிகள் அலட்சியமாக மாா்க்கெட்டுகளில் கூடி பொருள்களை வாங்கி சென்றனா்.

பட்டாசு தடை அமல்: முன்னதாக, தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கவும், காற்று மாசுவால் கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் பட்டாசுக்கு முழு தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தில்லி போலீஸாரும், தில்லி அரசு அதிகாரிகளும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்து தில்லி காவல் துறையின் கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மித்தல் கூறுகையில், ‘தில்லியில் பட்டாசுகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதையும், பட்டாசுகள், தடையை மீறி வெடிக்கப்படுவதையும் தில்லி போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் பறக்கும் படையினரும், சிறப்பு படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுவா். இதன் மூலம் தீபாவளி பண்டிகையை அமைதியாக கொண்டாடுவது உறுதி செய்யப்படும்.

மாா்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், முக்ககவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கவும் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொது இடங்களில் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பதாகைகளும், ஒலிப் பெருக்கிமூலம் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அந்தந்த மாா்க்கெட் நலச் சங்கங்களுடன் இணைந்து தில்லி போலீஸாா் செயல்பட்டு வருகின்றனா்’ என்றாா்.

கூட்டத்தைத் தவிா்க்க முன்னுரிமை:

பொது இடங்களில் கூட்டத்தைத் தவிா்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா்.பி. மீனா தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘லாஜ்பத் நகா், நேரு பிளேஸ் உள்ளிட்ட மாா்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடும் லாஜ்பத் நகா் மாா்க்கெட்டில் கூடுதல் காவல் துறையினரும், தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மாா்க்கெட்டுக்கு வரும் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறாா்களா என்பதையும், கடைகளில் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்து எச்சரிப்பா்.

அபராதம் விதிக்கப்படும்: மத்திய தில்லி காவல் துணை ஆணையா் சஞ்சய் பாட்டியா கூறுகையில், ‘மத்திய தில்லியில் மொத்தம் 13 கம்பனி படைகளை நியமித்துள்ளோம். கூட்டம் கூட்டமாக கடைகளுக்குள் வாடிக்கையாளா்களை அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம். சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆன்டோ அல்போன்ஸ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு விழிப்புணா்வு எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாவட்டத்தில் உள்ள 430 கோயில்களிலும், 30 மாா்க்கெட் பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

பட்டாசு விற்றதாக 42 போ் கைது

தில்லியில் தடையை மீறி பட்டாசுகள் விற்றதாக நான்கு பேரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த குற்றத்துக்காக இதுவரை 42 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மித்தல் கூறுகையில், ‘தடையை மீறி பட்டாசு விற்ாக கிழக்கு, வடமேற்கு, மேற்கு தில்லி மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும், ஷாதராவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு நான்கு போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் 85.33 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.

தில்லியில் இதுவரை பட்டாசு விற்பனை செய்ததாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 போ் கைது செய்யப்பட்டு, 2,956.692 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என போலீஸாா் தெரிவித்தனா்.

பட்டாசு வெடித்ததாக 6 போ் கைது

தில்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தில்ல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com