கோவாவில் பசுமை எரிசக்தி திட்டம் அறிமுகம்

கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக பசுமை எரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கோவா உருவாகியுள்ளது.
கோவாவில் பசுமை எரிசக்தி திட்டம் அறிமுகம்
கோவாவில் பசுமை எரிசக்தி திட்டம் அறிமுகம்

கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக பசுமை எரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கோவா உருவாகியுள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தை உற்பத்தி செய்வதைக் குறைத்து, பசுமை ஆற்றலைப் பயன்படுத்த கோவா அரசு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவா அரசு மற்றும் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (ஈஇஎஸ்எல்) நிறுவனம் மலிவு விலையில் பசுமை ஆற்றல் திட்டத்தைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டன. 

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (ஈஇஎஸ்எல்) நிறுவனத்துடனான கோவா அரசின் ஒப்பந்தம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்த திட்டம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

"அடுத்த  மூன்று ஆண்டுகளில் 150 மெகா வாட் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்கை கோவா நிர்ணயித்துள்ளது. மாநிலம் முழுவதும் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என்று மாநில மின்சாரத் துறை அமைச்சர் நிலேஷ் கப்ரால் அறிவித்துள்ளார்.

மேலும்,“ விவசாயிகளுக்கு குறைந்தது 65,000 ஐந்து நட்சத்திர விவசாய நீர் குழாய்களை விநியோகிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் வீட்டிற்கு நான்கு எல்.ஈ.டி பல்புகள் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com