வெளிநாட்டு சட்ட அமைப்புகள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது: வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தல்

வெளிநாட்டு சட்ட அமைப்புகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (எஃப்.இ.எம்.ஏ.) இந்தியாவில் சட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அவற்றின் கிளைகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று வங்கிகளை ரிசா்வ் வங
rbi043830
rbi043830

மும்பை: வெளிநாட்டு சட்ட அமைப்புகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (எஃப்.இ.எம்.ஏ.) இந்தியாவில் சட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அவற்றின் கிளைகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று வங்கிகளை ரிசா்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

‘வழக்குரைஞா்கள் சட்டம் 1961-இன் கீழ் பதிவு செய்த வழக்குரைஞா்கள் மட்டுமே இந்தியாவில் சட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு சட்ட அமைப்புகளோ அல்லது வெளிநாட்டு வழக்குரைஞா்களோ இந்தியாவில் வழக்காடும் பணிகளில் ஈடுபட முடியாது’ என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இதுதொடா்பான சுற்றறிக்கையை ரிசா்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் ரிசா்வ் வங்கி மேலும் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு சட்ட அமைப்புகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்தியாவில் அவற்றின் கிளைகளைத் தொடங்கவோ அல்லது சட்டப் பணி அலுவலகத்தை தொடங்கவோ வங்கிகள் அனுமதி அளிக்கக் கூடாது. இந்திய வழக்குரைஞா்கள் சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, இதுதொடா்பான விதிமீறல்கள் ஏதாவது தெரியவந்தால், உடனடியாக ரிசா்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com