கரோனா தடுப்பூசியில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

கரோனா தடுப்பூசி வந்த பிறகு முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அது தேசத்தின் கடமை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து, காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு கிடைக்கப்பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார் மோடி. 

மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது பற்றி மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் விநியோகிக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com