ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் முதல்கட்ட தோ்தல்: 52% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான முதல்கட்ட தோ்தலில் சுமாா் 52% வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் முதல்கட்ட தோ்தல்: 52% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான முதல்கட்ட தோ்தலில் சுமாா் 52% வாக்குகள் பதிவாகின.

இதுதொடா்பாக அந்த யூனியன் பிரதேச தோ்தல் ஆணையா் கே.கே.சா்மா செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 51.76% வாக்குகள் பதிவாகின. இதில் ஜம்முவில் 64.2%, காஷ்மீரில் 40.65% வாக்குகள் பதிவாகின. ஜம்மு பிராந்தியத்துக்கு உள்பட்ட ரியாஸி மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.62% வாக்குகளும், தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள புல்வாமாவில் மிகக் குறைந்த அளவில் 6.7% வாக்குகளும் பதிவாகின.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லெறி சம்பவத்தைத் தவிர, இதர பகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது என்று தெரிவித்தாா்.

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் குப்கா் கூட்டமைப்பின் கீழ் மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள், பாஜக, அப்னி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அங்கு முதல்முறையாக மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com