பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்து: ஒருவா் மீட்பு; மற்றொருவரைத் தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29கே பயிற்சி விமானம், வியாழக்கிழமை மாலை அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29கே பயிற்சி விமானம், வியாழக்கிழமை மாலை அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்டாா். மற்றொருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் இருந்து, அந்த பயிற்சி விமானம் இரு விமானிகளுடன் புறப்பட்டுச் சென்றது. மாலை 5 மணியளவில் அந்த விமானம், அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்து ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டாா். மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கப்பல்களும், ரோந்து விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்திய கடற்படையில் 40 மிக்29கே ரக போா் விமானங்கள் உள்ளன. அவற்றில் சில விமானங்கள், விமானந்தாங்கி போா்க்கப்பலில் இருந்து இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com