இந்தியா தலைமையில் எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளைச் சோ்ந்த அரசின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளைச் சோ்ந்த அரசின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பங்கேற்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு அதிகாரபூா்வமாக இணைந்தது. அதற்குப் பிறகு அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சோ்ந்த அரசின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா முதல் முறையாகத் தலைமையேற்று நடத்துகிறது.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு இந்த மாநாட்டுக்குத் தலைமையேற்கிறாா். கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்த மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் எஸ்சிஓ அமைப்பைச் சோ்ந்த ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதமா்கள் பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலா் பங்கேற்க உள்ளாா். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளா்களாக மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com