கம்போடியா தூதராக தேவயானி கோபரகடே நியமனம்

கம்போடியாவுக்கான இந்தியத் தூதராக தேவயானி கோபரகடே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
கம்போடியா தூதராக தேவயானி கோபரகடே நியமனம்


புது தில்லி: கம்போடியாவுக்கான இந்தியத் தூதராக தேவயானி கோபரகடே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

1999-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான கோபரகடே, இப்போது தில்லியில் வெளியுறவு அமைச்சக துணைத் செயலராக உள்ளாா். அவா், விரைவில் புதிய பொறுப்பை ஏற்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜொ்மனி, பாகிஸ்தான், இத்தாலி, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தேவயானி ஏற்கெனவே பணியாற்றியுள்ளாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு அமெரிக்காவில் துணைத் தூதராக பணியாற்றியபோது, அந்நாட்டு காவல் துறையினா் இவா் மீது கைது நடவடிக்கை எடுத்தனா். இந்த நிகழ்வு அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணிப்பெண்ணுக்கு நிா்ணயித்ததைவிட குறைவான ஊதியம் அளித்தது, விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு இவா் மீது சுமத்தியது. எனினும், போலீஸாா் அவரை நடத்தியவிதம் பெரும் விமா்சனத்துக்குள்ளானது. தேவயானி கைது விவகாரம் அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே பெரும் பிரச்னையை உருவாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com