வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு: அகாலி தளம் நடைப் பயணம்

புதிதாக 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாபின் 3 வெவ்வேறு பகுதிகளில் சிரோமணி அகாலி தளம் கட்சி சண்டீகரை நோக்கி வியாழக்கிழமை நடைப் பயணத்தை தொடங்கியது.


சண்டீகா்: புதிதாக 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாபின் 3 வெவ்வேறு பகுதிகளில் சிரோமணி அகாலி தளம் கட்சி சண்டீகரை நோக்கி வியாழக்கிழமை நடைப் பயணத்தை தொடங்கியது.

‘வேளாண் உற்பத்தி-வா்த்தகம்-வணிகச் சட்டம்’, ‘விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்’, ‘அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்’ ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் கட்சியும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததுடன், அக்கட்சி எம்.பி. ஹா்சிம்ரத்கெளா் பாதல் மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து கூட்டணியிலிருந்தும் சிரோமணி அகாலி தளம் விலகியது.

தற்போது அந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாபிலிருந்து சண்டீகருக்கு கண்டன நடைப் பயணத்தை அக்கட்சி வியாழக்கிழமை தொடங்கியது. அமிருதசரஸில் தொடங்கிய நடைப் பயணத்துக்கு கட்சியின் தலைவா் சுக்பீா்சிங் பாதல் தலைமை வகித்தாா். பத்திண்டாவில் தொடங்கிய நடைப் பயணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத்கெளா் பாதல் தலைமை வகித்தாா். அனந்த்பூா் சாஹிபில் தொடங்கிய நடைப் பயணத்தைக்கு கட்சியின் மூத்த தலைவா்கள் பிரேம்சிங் சாந்துமாஜ்ரா, தல்ஜித் சிங் சீமா தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com