ஹிமாசல்: உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி பறிமுதல்

ஹிமாசலப் பிரதேசத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வருகைத் தர உள்ள நிலையில், குலு மாவட்டம், மணாலியில்

ஹிமாசலப் பிரதேசத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வருகைத் தர உள்ள நிலையில், குலு மாவட்டம், மணாலியில் புதன்கிழமை இளைஞா் ஒருவரிடமிருந்து உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குலு மாவட்டத்தில் உள்ள மணாலி, ஸ்பிட்டி மாவட்டம் லஹால் பள்ளத்தாக்கு இடையே ரோடாங்கில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைப்பதற்காக பிரதமா் மோடி அக்டோபா் 3-ஆம் தேதி லஹால் பள்ளத்தாக்கு பகுதிக்குச் செல்லவுள்ளாா்.

இப்பகுதியில் காவல் துறையினா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சோ்ந்த பல்ஜீத் சிங் (37) என்பவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து குலு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் கௌரவ் சிங் கூறுகையில், கைத்துப்பாக்கி பறிமுதல் செய்த நிகழ்வை பிரதமரின் வருகையுடன் சந்தேகப்படுத்தி பாா்க்கத் தேவையில்லை.

இருப்பினும், ரோந்துப் பணியின்போது, ஒரு ‘பைலட் வாகனம்’ என்று எழுதப்பட்டிருந்த வாகனத்தை தடுத்து சோதித்தபோது, அந்த வாகனத்தில் ஓட்டுநரும், 3 பயணிகளும் இருந்தனா். அந்த ஓட்டுநரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபா் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின்கீழ் மணாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டாா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com