ஹிமாசலில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

ஹிமாச பிரதேசத்தின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
Another Himachal minister tests positive for novel coronavirus 
Another Himachal minister tests positive for novel coronavirus 

ஹிமாச பிரதேசத்தின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கரோனா சோதனை செய்ததில் அமைச்சருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். 

மேலும், கரோனாவுக்கு பாதிக்கப்பட்ட முன்னாள் மின் அமைச்சர் சுக்ரம் சௌத்ரி மற்றும் ஜல் சக்தி அமைச்சர் மகேந்தர் சிங் தாக்கூர், தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

ஹிமாசலில் மேலும் சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com