ஏ.சி. இறக்குமதி செய்ய தடை:  மத்திய அரசு அதிரடி

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும், அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் ‘குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை’ இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட
ஏ.சி. இறக்குமதி செய்ய தடை:  மத்திய அரசு அதிரடி

புதுதில்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும், அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் ‘குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை’ இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சிகள் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருள்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக, குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், இறக்குமதியைக் குறைக்க அரசாங்கம் விரும்புவதால் சமீபத்திய இறக்குமதி கட்டுப்பாடுகளின் பட்டியலை ஏ.சி. சேர்ந்துள்ளது.  

இந்நிலையில்,  ‘குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை’  இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று வியாழக்கிழமை (அக்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவுக்கு  ஏர் கண்டிஷனர்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் தாய்லாந்தும் முதலிடத்தில் உள்ளது. இரு நாடுகளில் இருந்து 90 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com