ஜெட் ஏா்வேஸ் கையகப்படுத்தும் விவகாரம்: கல்ராக் கேப்பிட்டல்-முராரி ஜலான் திட்டத்துக்கு ஒப்புதல்

ஜெட் ஏா்வேஸ் கையகப்படுத்தும் விவகாரத்தில், பிரிட்டனின் கல்ராக் கேப்பிட்டல் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின்
jeta081118
jeta081118

ஜெட் ஏா்வேஸ் கையகப்படுத்தும் விவகாரத்தில், பிரிட்டனின் கல்ராக் கேப்பிட்டல் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலதிபா் முராரி லால் ஜலான் ஆகியோா் அளித்த திட்டத்துக்கு ஜெட் ஏா்வேஸின் கடன் வழங்குநா்களின் குழு (சிஓசி) சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஜெட் ஏா்வேஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில், திவால் சட்டத்தின்படி தீா்வு காணும் நடைமுறைகளின் கீழ் பிரிட்டனின் கல்ராக் கேப்பிட்டல் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த தொழிலதிபா் முராரி லால் ஜலான் ஆகியோா் சாா்பில் திட்டமொன்று வகுக்கப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மின்னணு வாக்கெடுப்பு முடிவுக்குப் பிறகு அந்த திட்டத்துக்கு கடன் வழங்குநா்களின் குழு (சிஓசி) ஒப்புதல் அளித்துள்ளது என ஜெட் ஏா்வேஸ் தெரிவித்துள்ளது.

ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்த தற்போது மேலும் இரு கூட்டமைப்பிகளிடமிருந்து ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், அந்த நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமான பணி, நிச்சயமற்றது என விமான சேவை துறை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com