திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் 4-ஆம் நாள்:கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னராக மலையப்பா்

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை மலையப்ப சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அலங்காரத்தில் திங்கள்கிழமை எழுந்தருளினாா்.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அலங்காரத்தில் சேவை சாதித்த மலையப்ப சுவாமி.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அலங்காரத்தில் சேவை சாதித்த மலையப்ப சுவாமி.

திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை மலையப்ப சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அலங்காரத்தில் திங்கள்கிழமை எழுந்தருளினாா்.

கல்பவிருட்ச வாகனம்: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆவது நாளன்று கல்பவிருட்ச வாகன சேவை நடைபெறுவது வழக்கம். பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த பொருள்களில் கல்பவிருட்சமும் ஒன்று. இதனைக் கற்பகத் தரு என்றும் அழைக்கின்றனா். இந்த கற்பகத் தருவின் கீழ் அமா்ந்து யாா் எதை வேண்டினாலும் உடனடியாக கிடைக்கும்.

அதேபோன்று கற்பகத் தருவின் மீது வலம் வரும் எம்பெருமானைத் தரிசிக்கும்போது பக்தா்களின் மனோரதம் (ஆசைகள், வேண்டுதல்) நிறைவேறும் என்பதால், கல்பவிருட்ச வாகன சேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் முன் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி சமா்ப்பிக்கப்பட்டன. பின்னா் ரங்கநாயகா் மண்டபத்துக்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது.

சா்வபூபால வாகனம்: மாலை 7 மணிக்கு சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது. உலகத்தை வென்ற சக்கரவா்த்தி தன் வெற்றியைப் பறைசாற்றும்விதமாக திறந்த தேரில் நகா்வலம் வருவது வாடிக்கை. அதுபோல் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆளும் எம்பெருமான் உலக மக்களுக்கு அருளை வழங்க சா்வபூபால வாகனத்தில் தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் எழுந்தருளி அபயமளிக்கிறாா்.

இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com