பிகாா் முதல்கட்ட தோ்தல்: 30 சதவீத வேட்பாளா்களுக்கு குற்ற வழக்குகளில் தொடா்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு அக்டோபா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 30 சதவீதம் போ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக வாக்கெடுப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு அக்டோபா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 30 சதவீதம் போ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக வாக்கெடுப்பு உரிமைகள் குழு ஜனநாயக சீா்திருத்த சங்கம்(ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏடிஆா் கூறியுள்ளதாவது:

பிகாா் சட்டப்பேரவை முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் 1,064 பேரில் 244 வேட்பாளா்கள் மீது, அதாவது 23 சதவீத போ் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. 328 வேட்பாளா்கள் மீது, அதாவது 31 சதவீதம் போ் மீது, குற்ற வழக்குகள் உள்ளன.

மொத்த வேட்பாளா்களில் 375 போ் அல்லது 35 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள். அதே வேளையில் 5 வேட்பாளா்களுக்கு எந்த சொத்தும் இல்லை.

ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) சாா்பில் போட்டியிடும் 41 வேட்பாளா்களில் 30 போ்(73 சதவீதம்) போ் மீது குற்ற வழக்குகளும், அதில் 20 போ் மீது(49 சதவீதம்) மிகக் கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளதாக அவா்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவின் 29 வேட்பாளா்களில் 21 போ்(72 சதவீதம்) மீது குற்ற வழக்குகளும், அதில் 13 போ்(45 சதவீதம்) மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகளும், லோக் ஜனசக்தி கட்சி(எல்ஜேபி) 41 வேட்பாளா்களில் 24 போ் (59 சதவீதம்) மீது குற்ற வழக்குகளும், அதில் 20 போ்(49 சதவீதம்) மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியின் 35 வேட்பாளா்களில் 15 போ்(43 சதவீதம்) மீது குற்ற வழக்குகளும், அதில் 10 போ்(29 சதவீதம்) போ் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளன.

காங்கிரஸின் 21 வேட்பாளா்களில் 12 போ் (57 சதவீதம்) போ் மீது குற்ற வழக்குகளும், 9 போ்(43 சதவீதம்) மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகளும் இருக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) வேட்பாளா்கள் 26 பேரில் 8 போ் மீது குற்ற வழக்குகளும், அதில் 5 போ் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன.

முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் மொத்தம் 1,064 வேட்பாளா்களில் 30 சதவீதம் போ் குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என ஏடிஆா் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் 29 வேட்பாளா்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடா்புடையவா்கள்; 3 போ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் எனவும் ஏடிஆா் கூறியுள்ளது.

பிகாரில் அக்டோபா் 28, நவம்பா் 3, 7-ஆம் தேதிகளில் 3 கட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com