“நிதிஷ்குமார் வென்றால் பிகார் பாழாகிவிடும்”: லோக் ஜன்சக்தி விமர்சனம்

வகுப்புவாதத்தைத் தூண்டும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானால் பிகார் பாழாகிவிடும் என லோக் ஜன்சக்தி விமர்சனம் செய்துள்ளது.
லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்
லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்

வகுப்புவாதத்தைத் தூண்டும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானால் பிகார் பாழாகிவிடும் என லோக் ஜன்சக்தி விமர்சனம் செய்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள லோக் ஜன்சக்தி கட்சி நிதிஷ்குமாரின் ஜேடியூவிற்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி பிகார் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியூவை விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் லோக் ஜன்சக்தி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்,  “வகுப்புவாதத்தைத் தூண்டும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானால் பிகார் பாழாகிவிடும்.” என விமர்சித்தார்.

மேலும் வகுப்புவாதத்தை ஊக்குவிப்பவரால் வளர்ச்சியைத் தரமுடியாது என சிராஜ் தெரிவித்தார்.  தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிகாரே முதன்மை எனும் கோஷத்தை சிராக் பாஸ்வான் முன்வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com