உண்டியல் காணிக்கை ரூ1.52 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.1.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
21tpt_donation_of_ten_lakhs_at_svbc_trust_2110chn_193_1
21tpt_donation_of_ten_lakhs_at_svbc_trust_2110chn_193_1


திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.1.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச்செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் செவ்வாய்க்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ. 1.52 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.10 லட்சம் நன்கொடை

ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் நடத்தி வரும் எஸ்விபிசி தொலைக்காட்சி அறக்கட்டளைக்கு ஒடிஸாவில் உள்ள சிவம் கான்டேவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திருப்பதி பிரதிநிதியான ராகவேந்திரா ரூ.10 லட்சத்தை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com