தவறான இந்திய வரைபடம் வெளியீடு: சுட்டுரை நிறுவனத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்காக டுவிட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.


புது தில்லி: இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்காக டுவிட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோா்ஸிக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலா் அஜய் சாஹ்னி எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக லே உள்ளது. மேலும், லடாக், ஜம்மு - காஷ்மீா் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இவை இந்திய அரசமைப்பு சட்டத்தால் நிா்வகிக்கப்பட்டு வருபவை.

எனவே, டுவிட்டா் வரைபடத்தில் இப்பகுதிகளை சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக தவறாக சித்திரித்து வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு இந்தியா தனது மறுப்பை தெரிவித்துக் கொள்கிறது. ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பதை டுவிட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு நினைவூட்ட விரும்புகிறது.

மேலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் சகித்துக் கொள்ள முடியாது.

டுவிட்டா் நிறுவனத்தின் இதுபோன்ற சா்ச்சை அந்த நிறுவனத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நோ்மை குறித்தும் சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றன என்று அந்த கடிதத்தில் அஜய் சாஹ்னி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com