கணவருக்கு மாதம் ரூ.1,000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் ரூ. 1,000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் ரூ. 1,000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி தம்பதி பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. 

இந்நிலையில்,  பராமரிப்பு செலவுக்காக மனைவியிடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றுத் தருமாறு கணவர், இந்து திருமணச் சட்டம் 1955-இன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண், தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com