தெலங்கானாவில் 40 லட்சத்தைக் கடந்த கரோனா பரிசோதனைகள்

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,421 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 
COVID-19: Telangana adds 1,421 new cases, number of tests crosses 40 lakh mark 
COVID-19: Telangana adds 1,421 new cases, number of tests crosses 40 lakh mark 


தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,421 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 1,421 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,001 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 20,377 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தெலங்கானாவில் 40,17,353 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 22-ம் தேதி மட்டும் 38,484 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை1,298 -ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com