பிகார் தேர்தல்: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிகார் தேர்தல்: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பிகார் தேர்தல்: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு


பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 10 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவை மிக முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி, அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், ராம் மனோகர் லோஹியா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் புகைப்படங்கள் தேர்தல் வாக்குறுதி புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதேவேளையில் தேஜஸ்வி யாதவின் மிகப்பெரிய புகைப்படம் அந்த முகப்புப் பக்கத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

தேர்தல் அறிக்கையில், தற்போது பிகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருப்பதோடு, விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எங்களுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் அமரவைத்தால், வேளாண்மை, தொழில் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com