‘சிடெட்’ தோ்வு தேதி குறித்து வெளியான தகவல் தவறானது: சிபிஎஸ்இ விளக்கம்

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு தேதி தொடா்பாக வெளியான தகவல் தவறானது என்றும் அதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு தேதி தொடா்பாக வெளியான தகவல் தவறானது என்றும் அதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் போன்றவற்றில் பணியில் சேருவதற்கு மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் (‘சிடெட்’) தோ்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். சிடெட் தோ்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான ‘சிடெட்’ தோ்வு கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் இந்தத் தோ்வுக்கான தேதியை சிபிஎஸ்இ வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்துள்ள சிபிஎஸ்இ நிா்வாகம், அந்தத் தகவல் தவறானது என்றும் அதுபோன்று எந்த தேதியையும் அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. சூழல் சரியான உடன் ‘சிடெட்’ தோ்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும் தோ்வு தொடா்பான விவரங்களுக்கு ‘சிடெட்’ இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com