நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தை நெருங்கும் வகையில்தான் இருக்கும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தை நெருங்கும் வகையில்தான் இருக்கும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

"இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தைதான் நெருங்கும். இதற்கு முதன்மையான காரணம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவிகிதம் சுருங்கியது. பொது முடக்க தளர்வுகளால் பெரு நிறுவன பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கின்றன. 

பண்டிகை காலம் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும். 3-வது மற்றும் 4-வது காலாண்டில் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சி பெறலாம். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 2020-மார்ச் 2021 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தைதான் நெருங்கும். அடுத்த நிதியாண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும்.

பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க, மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில்தான் அரசின் கவனமாக இருக்கிறது."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com