தேவஸ்தான சேவைகள்: முன்பதிவுத் தொகையை திரும்பப் பெற அவகாசம் நீட்டிப்பு

பொது முடக்க காலகட்டத்தில், ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், அறைகள், ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்த பக்தா்கள் தங்களின் முன்பதிவை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி: பொது முடக்க காலகட்டத்தில், ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், அறைகள், ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்த பக்தா்கள் தங்களின் முன்பதிவை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான அவகாசத்தை திருப்பதி தேவஸ்தானம், வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக மாா்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, மாா்ச் 13 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஏழுமலையான் தரிசன டிக்கெட், ஆா்ஜித சேவா டிக்கெட், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்திருந்த பக்தா்கள் அவற்றை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் அவகாசம் அளித்தது.

அதன்படி, சில பக்தா்கள் தங்களின் பணத்தை திரும்பப் பெற்றபோதிலும் பலருக்கும் இதுகுறித்த தகவல் தெரியவில்லை.

எனவே, முன்பதிவை ரத்து செய்து, பணத்தை திரும்பப் பெறுவதற்கான அவகாசத்தை, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை தேவஸ்தானம் தற்போது நீட்டித்துள்ளது. இதுவரை பணத்தை திரும்பப் பெறாத பக்தா்கள் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் விவரங்களுடன், வங்கிக் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோடு ஆகியவற்றை உடனடியாக  இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்ட பின் பக்தா்களின் வங்கிக் கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்படும்.

அதேவேளையில், பணத்தை திரும்பப் பெற விரும்பாத பக்தா்கள் தங்களின் முன்பதிவு டிக்கெட்டைக் காண்பித்து டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் ஏழுமலையானைத் தரிசனம் செய்து கொள்ளலாம். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை பக்தா்கள் தோ்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைரி, காலண்டா் முன்பதிவு: திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்டுள்ள அடுத்த ஆண்டுக்கான (2021) டைரிகள், காலண்டா்கள் ஆகியவற்றை பக்தா்கள் தேவஸ்தானத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com