தேவஸ்தான தொலைக்காட்சிக்கு தலைவா் நியமனம்

திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பக்தி தொலைக்காட்சி சேனலுக்கு (எஸ்விபிசி) புதிய தலைவரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.


திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பக்தி தொலைக்காட்சி சேனலுக்கு (எஸ்விபிசி) புதிய தலைவரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

ஏழுமலையான் மற்றும் தாயாருக்கு நடத்தப்படும் கைங்கரியங்கள், உற்சவங்கள் உள்ளிட்டவற்றை ஒளிபரப்பு செய்ய ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் என்ற தொலைக்காட்சி சேனல் திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது. தெலுங்கு மொழியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் விரிவாக்கியுள்ளது.

விளம்பரமில்லாமல் நிகழ்ச்சிகளை வழங்கும் நோக்கில், தொலைக்காட்சியின் பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் நன்கொடைகளை வங்கியில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டி மூலம் சேனலை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), தூா்தா்ஷனில் பணியாற்றி வந்த சுரேஷ்பாபுவை தேவஸ்தானம் நியமித்தது.

இந்நிலையில், தொலைக்காட்சியின் புதிய தலைவராக நெல்லூா் மாவட்டம் வெங்கடகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சாய்கிருஷ்ணா எச்சந்திராவை 2 ஆண்டு காலத்துக்கு நியமித்து ஆந்திர அரசு புதன்கிழமை உத்திரவு பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com