குஜராத் ஆரோக்கிய வனம் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர்

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா பகுதியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் தொடக்கி வை
குஜராத் ஆரோக்கிய வனம் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர்
குஜராத் ஆரோக்கிய வனம் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர்

புது தில்லி: குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா பகுதியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் தொடக்கி வைத்தார்.

ஆரோக்கிய வனம் திட்டத்தில், 17 ஏக்கர் பரப்பளவில், 380 வெவ்வேறு வகையான 5 லட்சம் தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கிய மையத்தில், பாரம்பரிய சிகிச்சை வசதிகள் உள்ளன. இங்குள்ள சாந்திகிரி உடல் நல மையத்தில் ஆயுர்வேதம், சித்தா, யோகா மற்றும் பஞ்சகர்மா அடிப்படையிலான சிகிச்சைகளை அளிக்கப்படும்.

ஒற்றுமை வணிக வளாகம் :
இந்த வணிக வளாகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான ஊட்டசத்து; கண்ணாடி பிரமை:
உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான ஊட்டசத்து பூங்கா குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 35,000 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இங்கு இயக்கப்படும் ரயில்,  அன்னபூர்ணா, ஆரோக்கிய பாரதம் என்ற பெயரிலான பல்வேறு அற்புதமான கருத்தாக்கத்துடன் கூடிய நிறுத்தங்களில் நின்று செல்லும். கண்ணாடி பிரமை, 5டி மெய்நிகர் தியேட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் வழியே ஊட்டசத்து விழிப்புணர்வை இது ஏற்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com