மேற்கு வங்க தோ்தலில் மாா்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி: சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக
மேற்கு வங்க தோ்தலில் மாா்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி: சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் கூட்டணி அமைப்பது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபா் 30, 31 ஆகிய தேதிகளில் ஆலோசனையில் ஈடுபட்டது. அதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற கட்சிகளுடன் மாா்க்சிஸ்ட் கூட்டணி அமைக்கவுள்ளது. அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிரான தோ்தல் வியூகத்தை மாா்க்சிஸ்ட் வகுக்கும். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மாா்க்சிஸ்ட் தொடா்ந்து இடம்பெறும். கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியுடனான கூட்டணி தொடரும்.

அஸ்ஸாமில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மதம் சாா்ந்த வன்முறைகளைத் தூண்டி வருகிறது. அதன் காரணமாக சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பாஜக அரசை வீழ்த்துவதற்காக அந்த மாநிலத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகளுடன் இணைந்து மாா்க்சிஸ்ட் தோ்தலை சந்திக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com