அருணாசலில் பாதுகாப்புப் படையினர் உள்பட 148 பேருக்கு கரோனா

அருணாசலில் மேலும் 148 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறிந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.360 ஆக உயர்ந்துள்ளது. 
148 fresh cases take Arunachal's COVID-19 tally to 4,360 
148 fresh cases take Arunachal's COVID-19 tally to 4,360 

அருணாசலில் மேலும் 148 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறிந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.360 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய கரோனா நிலவரம்:

இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 47 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 2 சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 148 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய பாதிப்பில், தலைநகரில் 31 பேரும், டிராப்பில் 28 பேரும், லெபராடாவிலிருந்து 20 பேரும், மேற்கு சியாங்கிலிருந்து 18 பேரும், தவாங்கிலிருந்து 14 பேரும், பாம்பும்பேர் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களில் இருந்து தலா 6 பேரும் பதிவாகியுள்ளதாக மாநில கண்காணிப்பு அதிகாரி டாக்டர் எல்.ஜம்பா தெரிவித்தார்.

மேலும், அப்பர் சுபன்சிரியில் 5 பேரும், சாங்லாங்கில் 4, கிழக்கு சியாங்கில் 3, நம்சாய், லோயர் திபாங் பள்ளத்தாக்கு, லாங்கிங், குருங் குமே மற்றும் லோஹித் ஆகிய இடங்களில் தலா 2 பேரும், மேல் சியாங், லோயர் சுபன்சிரி மற்றும் லோயர் சியாங் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. 

5 பேரைத் தவிர, மற்ற அனைவரும் அறிகுறி இல்லாதவர்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் கரோனா பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றார்.

47 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள், 26 எல்லை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இரண்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது 

மேலும், ஒரேநாளில் 96 பேர் குணமடைந்து நிலையில், மொத்தம் 3,075 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், அருணாச்சல பிரதேசத்தில் தற்போது 1,278 பேர் மருத்துவமனை சிகிச்சை உள்ளனர். அதே சமயம் 7 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். 

இதுவரை அந்த மாநிலத்தில் 1,73,469 மாதிரிகள் பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com