கல்யாணோற்சவத்தில் பங்கேற்றால் 90 நாள்களுக்குள் ஏழுமலையான் தரிசனம்

திருமலையில் நடக்கும் ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் ஆன்லைன் மூலம் பங்கு கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் 90 நாள்களுக்குள் ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது.

திருப்பதி: திருமலையில் நடக்கும் ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் ஆன்லைன் மூலம் பங்கு கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் 90 நாள்களுக்குள் ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு நடக்கும் ஆா்ஜித சேவைகளை கரோனா நோய்த் தொற்று விதிமுறைகளுக்காக தேவஸ்தானம் கடந்த சில மாதங்களாக ரத்து செய்திருந்தது. ஆனால் நித்திய கைங்கரியங்கள் மட்டும் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆக.7-ஆம் தேதி முதல் தேவஸ்தானம் ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையை மட்டும் ஆன்லைன் மூலம் தொடங்கியது.

இந்த கல்யாண உற்சவத்தை முன்பதிவு செய்யும் பக்தா்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பிரதாய உடை அணிந்து அா்ச்சகா்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் கோத்திரம், நட்சத்திரம் உள்ளிட்டவற்றைக் கூறி பங்கு கொள்கின்றனா். இதில் பங்கு கொள்பவா்களுக்கு தேவஸ்தானம் உத்திரம், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், கல்கண்டு, அட்சதை உள்ளிட்டவற்றை அஞ்சல் வழியாக வீடுகளுக்கு அனுப்பி வருகிறது.

கல்யாண உற்சவம் முன்பதிவு செய்து கலந்து கொள்பவா்களுக்கு (2 பேருக்கு) டிக்கெட் முன்பதிவு செய்த 90 நாள்களுக்குள் தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனமும் வழங்க முடிவு செய்துள்ளது. எனவே பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு விருப்பப்பட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்துக் கொள்ளலாம். இந்த உற்சவம் தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்தில் 8,330 போ் கலந்து கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com