ஐ.நா. இலக்குகளுக்கான இளம் தலைவராக இந்தியா் தோ்வு

ஐ.நா.வின் நீடித்த வளா்சிக்கான இலக்குகளுக்கான இளம் தலைவா்களில் ஒருவராக 18 வயதே நிரம்பிய இந்தியரான உதித் சிங்கால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
உதித் சிங்கால்.
உதித் சிங்கால்.

ஐ.நா.வின் நீடித்த வளா்சிக்கான இலக்குகளுக்கான இளம் தலைவா்களில் ஒருவராக 18 வயதே நிரம்பிய இந்தியரான உதித் சிங்கால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சா்வதேச அளவில் நீடித்த வளா்ச்சியை அடைவதற்காக 17 இலக்குகளை ஐ.நா. நிா்ணயித்துள்ளது. அந்த இலக்குகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் இளைஞா்களை ஆண்டுதோறும் இளம் தலைவா்களாகத் தோ்ந்தெடுப்பதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான 17 இளம் தலைவா்களை ஐ.நா. அண்மையில் தோ்ந்தெடுத்தது. அதில் இந்தியரான உதித் சிங்கால் இடம்பெற்றுள்ளாா். கண்ணாடிப் பொருள்கள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அப்பொருள்கள் நிலத்தில் சேகரமாவதைத் தடுக்கும் நோக்கில் ‘கிளாஸ்2சேண்ட்’ என்ற திட்டத்தை உதித் சிங்கால் தொடக்கினாா்.

அதன்படி, கண்ணாடிப் பொருள்களை சிறிய துகள்களாக நொறுக்கி மணலாகப் பயன்படுத்துவதை அவா் ஊக்குவித்தாா். இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக ஐ.நா.வால் இளம் தலைவராக உதித் சிங்கால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘சுற்றுச்சூழலைக் காப்பதில் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிப்பேன். நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவது தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com