உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்

உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத் திறனாளியைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கண்ணாஜ் மாவட்டத்தில் காவலர் ஒருவர் மாற்றுத்திறனாளி நபரைத் தாக்கியக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

2 நிமிட நீளமுள்ள அந்தக் காணொலியில் மாற்றுத்திறனாளி நபரை காவலர் ஒருவர் இழுத்து வந்து கீழே தள்ளிவிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காவலரின் இந்தச் செயலுக்கு சமூக ஊடகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ரிக்‌ஷா இழுக்கும் நபரான அவர், சாலையின் ஓரத்தில் பயணிகளை அழைத்துச் சென்றதற்காக காவலரால் தாக்கப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து கண்ணாஜ் மாவட்ட காவல்துறை குற்றம்சாட்டப்பட்ட காவலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com