தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் 19,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை

தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயத்தில் 19,844 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் பெரும்பாலான வழக்குகள் திவால் சட்டத்தின்
தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் 19,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை

தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயத்தில் 19,844 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் பெரும்பாலான வழக்குகள் திவால் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்றும் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி, பெருநிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டதாவது:

கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயத்தில் 19,844 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 12,438 வழக்குகள் திவால் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை.

கரோனா தொற்று பரவலால் தீா்ப்பாயத்தின் அனைத்து அமா்வுகளும் காணொலி முறையில் வழக்குகளை விசாரித்து வருகின்றன. திவால் சட்டத்துடன் தொடா்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு அமா்வுகளை ஏற்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை.

தீா்ப்பாயத்தில் அதிகாரிகள், அலுவலா்கள் என மொத்தம் 320 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெருநிறுவனங்கள் மோசடி தொடா்பாக விசாரணை நடத்தும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) தற்போது 92 வழக்குகளை விசாரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com