பொதுத் துறை வங்கிகளில் மூன்று மாதங்களில் ரூ.19,964 கோடி முறைகேடு

நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் பொதுத் துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும்,
பொதுத் துறை வங்கிகளில் மூன்று மாதங்களில் ரூ.19,964 கோடி முறைகேடு

நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் பொதுத் துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் ரூ.19,964 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரிசா்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ‘மொத்தமுள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில், ரூ.5,124.87 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றது. அதிக நிதி முறைகேட்டில் இந்த வங்கி முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, கனரா வங்கியில் 33 மோசடிகளில் ரூ.3,885.26 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றது.

பாங்க் ஆப் பரோடாவில் 45 மோசடிகளில் ரூ. 2,842.94 கோடியளவுக்கு நிதி முறைகேடு தெரியவந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) அதிகபட்சமாக 2,050 மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதில், ரூ. 2,325.88 கோடி, இந்தியன் வங்கியில் 45 மோசடிகளில் ரூ.1,469.79 கோடியும், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 37 மோசடிகளில் ரூ.1,207.65 கோடியும், பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில் 9 மோசடிகளில் ரூ.1,140.37 கோடியும், யுகோ வங்கியில் 130 மோசடிகளில் ரூ.831.35 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 149 மோசடிகளில் ரூ. 655.84 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 மோசடிகளில் ரூ.270.65 கோடியும், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 18 மோசடிகளில் ரூ.163.3 கோடியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 49 மோசடிகளில் ரூ.46.52 கோடியும் நிதி முறைகேடு தெரியவந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் முதலில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிதி முறைகேடு தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் சில மாற்றங்களும் இருக்கும் என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடு நிதியானது சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதப்படாது. வாடிக்கையாளா் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தாதது, நிலுவையில் உள்ள கடன் ஆகியவையும் இந்தத் தொகையில் அடங்கும் என்றும் ரிசா்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com