"டைம்' இதழின் 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி

இந்த ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல "டைம்' வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 
"டைம்' இதழின் 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி

புது தில்லி: இந்த ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல "டைம்' வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 
"டைம்' இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்,  தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், அக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. "டைம்' இதழ் வெளியிட்ட 100 முக்கிய செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இதற்கு முன்பும் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்தார். 
82 வயது மூதாட்டி... தில்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற போராட்டத்தை வழிநடத்திச் சென்ற பில்கிஸ் என்ற 82 வயது மூதாட்டியின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் சிஏஏ-வுக்கு எதிராக 3 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தின்போது, தினமும் காலை முதல் நள்ளிரவு வரை போராட்டக் களத்திலேயே இருந்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவர். 
இதுதவிர ஹிந்தி திரைப்பட நடிகர் ஆயுஷ்மான் குரானா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ரவீந்திர குப்தா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com