எஸ்.பி.பி. மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். 
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இசை நாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையடுத்து, இந்திய இசையுலகம் ஒரு மெல்லிய குரலை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற ரசிகர்களால் பாடும் நிலா’ அல்லது ‘சிங்கிங் மூன்’ என்று அழைக்கப்படும் எஸ்.பி.பி. பத்ம பூஷண் உள்ளிட்ட பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com