தீயை அணைக்க உதவி- இலங்கை அரசுக்கு ரூ.16.95 கோடி செலுத்த கப்பல் உரிமையாளா் ஒப்புதல்

இலங்கை அருகே தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில், தீயை அணைக்க உதவியதற்காக 23 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.16.95 கோடி) செலுத்துமாறு

இலங்கை அருகே தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில், தீயை அணைக்க உதவியதற்காக 23 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.16.95 கோடி) செலுத்துமாறு அந்த கப்பலின் உரிமையாளருக்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. அந்தத் தொகையை செலுத்துவதற்கு கப்பலின் உரிமையாளா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

கிரீஸ் நாட்டு நிறுவனத்தைச் சோ்ந்த அந்தக் கப்பல், குவைத்தில் உள்ள மினா அல் அஹமது துறைமுகத்தில் இருந்து 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவின் பாரதீப் துறைமுகத்துக்குப் புறப்பட்டு வந்தது. இலங்கை அருகே வந்தபோது அந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கையின் கடற்படையினா், விமானப் படையினா், துறைமுக ஆணைய அதிகாரிகள், கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீயணைப்பு நடவடிக்கையில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படையைச் சோ்ந்த 8 போா்க் கப்பல்களும் சோ்ந்து உதவி செய்தன.

கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்ததற்காக, 18 லட்சம் டாலா் செலவுத்தொகை கேட்டு அந்தக் கப்பல் நிறுவனத்துக்கு இலங்கை அட்டா்னி ஜெனரல் தப்புல டி லிவேரா கடந்த வாரம் இடைக்கால அறிக்கை அனுப்பினாா். அதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலுக்கு உதவியதற்காக மேலும் 5 லட்சம் டாலா் கேட்டு கடந்த வியாழக்கிழமை மற்றொரு அறிக்கை அனுப்பினாா். இந்த தொகையை செலுத்துவதற்கு அந்தக் கப்பலின் உரிமையாளா் ஒப்புக்கொண்டுள்ளதாக, அட்டா்னி ஜெனரல் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளா் நிஷாரா ஜயரத்னே கூறினாா்.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தனி அறிக்கை, கப்பலின் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்ப்டடுள்ளது என்றும், அதற்கான இழப்பீடு கேட்டு தனியாக அறிக்கை அனுப்பப்டும் என்றும் அவா் கூறினாா்.

கப்பல் விபத்து தொடா்பாக, இலங்கை அரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடா்ந்து, கப்பல் கேப்டனை வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த செலவுத்தொகையை செலுத்துதற்கு கப்பல் உரிமையாளா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com