'ஒரு நாளுக்கு 5 லட்சம் கரோனா பாதுகாப்பு உடை தயாரிக்கப்படுகிறது'

இந்தியாவில் நாளொன்றுக்கு 5 லட்சம் கரோனா பாதுகாப்பு உடை தயாரிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் நாளொன்றுக்கு 5 லட்சம் கரோனா பாதுகாப்பு உடை தயாரிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அறக்கட்டளை தினத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் அணியும் கரோனா பாதுகாப்பு உடை தயாரிப்பில் இந்தியாவில் 110 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவைகளின் மூலம் நாளொன்றுக்கு 5 லட்சம் கரோனா பாதுகாப்பு உடை தயாரிக்கப்படுகிறது.

போதுமான கரோனா பாதுகாப்பு உடை இல்லை என்று மாநில அரசுகள் புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நாங்கள் அனுப்பும் கரோனா பாதுகாப்பு உடையை வைப்பதற்கு இடமில்லை என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு கரோனா தடுப்பு உபகரணங்களின் உற்பத்தி நாட்டில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com