பயங்கரவாதம், இன அழிப்பால் அறியப்படும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பதிலடி

கடந்த 70 ஆண்டுகளில் பயங்கரவாதம், இன அழிப்பு, பெரும்பான்மையின அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றால் அறியப்படும் நாடாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக ஐ.நா.வில் இந்தியா பதிலடி தந்துள்ளது.
பயங்கரவாதம், இன அழிப்பால் அறியப்படும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பதிலடி

கடந்த 70 ஆண்டுகளில் பயங்கரவாதம், இன அழிப்பு, பெரும்பான்மையின அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றால் அறியப்படும் நாடாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக ஐ.நா.வில் இந்தியா பதிலடி தந்துள்ளது.

ஐ.நா.வின் 75-ஆவது பொதுச் சபைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வழியில் உரையாற்றி வருகின்றனா். அதன்படி, பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் ஆற்றிய உரையின்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து பேசினாா். மேலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்தும் அவா் கருத்து தெரிவித்திருந்தாா்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் முதன்மைச் செயலா் மிஜிடோ வினிடோ கூறியதாவது:

வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொள்பவா்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பிரதமா் இம்ரான் கான் குறிப்பிட்டாா். அவரையே குறிப்பிட்டு அவா் அந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாரா என்று சந்தேகம் எழுகிறது. ஐ.நா. சபையின் மூலமாக வதந்திகள் உள்ளிட்டவற்றைப் பரப்புவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், இன அழிப்பு, பெரும்பான்மையின அடிப்படைவாதம், அணு ஆயுத வா்த்தகம் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பாகிஸ்தான் அறியப்பட்டு வருகிறது. ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் பாகிஸ்தானிலேயே உள்ளனா்.

அத்தகைய பயங்கரவாதிகளுக்கு அரசு நிதியிலிருந்து ஓய்வூதியம் அளித்த பெருமையும் பாகிஸ்தான் நாட்டையே சேரும். சா்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை ‘தியாகி’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமரே குறிப்பிட்டுள்ளாா்.

தெற்காசியாவில் இனப் படுகொலையை 39 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்திய நாடு பாகிஸ்தான். ஆனால், தற்போது நஞ்சு நிறைந்த சொற்களைப் பயன்படுத்தி ஐ.நா.வில் அந்நாடு உரையாற்றுகிறது. பாகிஸ்தானில் 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதாக அமெரிக்காவில் அந்நாடு கடந்த ஆண்டு வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் ஆகியோரை கட்டாய மதமாற்றத்துக்கு உள்படுத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் மிஜிடோ வினிடோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com