உ.பி. வன்கொடுமை: போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸார் கைது

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் கட்சியினர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உ.பி. வன்கொடுமை: போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸார் கைது
உ.பி. வன்கொடுமை: போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸார் கைது

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் கட்சியினர் தில்லி ராஷ்டிரபதி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
    
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செவ்வாய்க் கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதில் பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட போதிய அவகாசம் அளிக்காமல், அவசர அவசரமாக உடலை எரிக்க காவல்துறையினர் அழுத்தம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இந்த விவகாரத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் கோஷங்களை எழுப்பியவாறே ராஷ்டிரபதி நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றனர்.

இதில் மகிளா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமிர்தா தவான், மாநிலங்களவை உறுப்பினர் பி.எல்.புனியா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com