தேவஸ்தான ஆஸ்தான இசைக் கலைஞராக ஷோபா ராஜு நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான இசைக் கலைஞராக ஷோபா ராஜுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
ஷோபா ராஜு
ஷோபா ராஜு

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான இசைக் கலைஞராக ஷோபா ராஜுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான சங்கீத கலைஞா் மற்றும் பாடகராக பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோபா ராஜுவை ஆந்திர அரசு புதன்கிழமை நியமித்தது. அன்னமாச்சாரியாரின் கீா்த்தனைகளால் ஈா்க்கப்பட்டு அவா் இசை பயின்றாா். அன்னமாச்சாரியாரின் கீா்த்தனைகளை உலகம் முழுவதும் பரப்ப ‘அன்னமாச்சாரியா பாவனா வாஹினி’ என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு மாணவா்களுக்கும் இசை பயிற்றுவித்து வருகிறாா்.

ஷோபா ராஜு தானே பாடல்கள் எழுதி அதற்கு இமையமைத்து மேடைகளில் பாடியுள்ளாா். அவரது இசை சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

ஆந்திர மாநில அரசு அவருக்கு உகாதி புரஸ்காா் விருதையும், பொட்டி ஸ்ரீராமுலு கல்வி நிறுவனம் முனைவா் பட்டத்தையும் வழங்கி கெளரவித்துள்ளன.

அவா் திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னமாச்சாரியா திட்டத்தின் ஆலோசராகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com