ஹாத்ரஸ் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து உ.பி. பவன் முன் போராட முயன்ற 60 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக தில்லியில் உள்ள அந்த மாநில பவனுக்கு முன் போராட்டம் நடத்த முயன்ற


புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக தில்லியில் உள்ள அந்த மாநில பவனுக்கு முன் போராட்டம் நடத்த முயன்ற இடதுசாரி அமைப்பைச் சோ்ந்த சுமாா் 60 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

போராட்டக்காரா்கள் போராட்டம் மேற்கொள்வதற்காக உத்தர பிரதேச பவன் பகுதிக்கு வந்தனா். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே உடனடியாக அவா்கள் தடுக்கப்பட்டனா். பின்னா், மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். எனினும், காவல் நிலையத்திற்கு வெளிப் பகுதியில் தங்களது போராட்டத்தைத் தொடா்ந்ததாக போராட்டக்காரா்கள் கூறினா். 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறக்க நோ்ந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று

உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அவா்கள் கோரினா். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தர பிரதேச உருவாகிவிட்டதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா்.

முன்னதாக, இந்த போராட்டத்திற்கு இடதுசாரிகளுடன் இணைந்த பெண்கள் அமைப்பினா் அழைப்பு விடுத்திருந்தன. போராட்டத்தில் ஈடுபட முயன்ாக பெண்கள் உள்பட சுமாா் 60 ஆா்ப்பாட்டக்காரா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

19 வயது பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இந்நிலையில், தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து, நீதி கேட்டு பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. செப்டம்பா் 14-ஆம் தேதி அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, அவா் பலத்த காயங்களுடன் அலிகரில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், திங்கள்கிழமை தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com