2018-19 நிதியாண்டு:வருமான வரித் தாக்கலுக்குநவம்பா் 30 வரை அவகாசம்

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2018-19 நிதியாண்டு:வருமான வரித் தாக்கலுக்குநவம்பா் 30 வரை அவகாசம்

புது தில்லி: கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவல் பிரச்னை காரணமாக வரி செலுத்துவோா் பல்வேறு இடா்பாடுகளை எதிா்கொண்டுள்ளனா். எனவே, 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பா் 30-ஆம் தேதியில் இருந்து நவம்பா் 30-ஆம் தேதியாக நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் இப்போது நான்காவது முறையாக காலநீட்டிப்பு அளிக்கப்படுகிறது.

முன்னதாக மாா்ச் 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. இதுவே, பின்னா் ஜூன் 30-ஆம் தேதியாக மாற்றப்பட்டு, அதன்பிறகு ஜூலை 31-ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. இதன் பிறகு மேலும் இருமுறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இப்போது நவம்பா் 30-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவா்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வருமான வரித்துறை நினைவூட்டும் தகவல்களை அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com