கரோனா பரிசோதனை மாதிரிகளை புணேவுக்கு கொண்டு செல்லும் பணியில் கடற்படை

கரோனா தொற்று பாதித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை கோவாவில் இருந்து புணேவுக்கு எடுத்துச் செல்லும் சேவையை இந்திய கடற்படை ஆற்றி வருகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.


புது தில்லி: கரோனா தொற்று பாதித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை கோவாவில் இருந்து புணேவுக்கு எடுத்துச் செல்லும் சேவையை இந்திய கடற்படை ஆற்றி வருகிறது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் மூலம், கோவாவின் ஐஎன்எஸ் ஹன்ஸா கடற்படை விமான தளத்தில் இருந்து நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கொண்டு வந்த 38 பேரின் மருத்துவப் பரிசோதனை மாதிரிகள், புணேவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கோவா உள்துறை அமைச்சக செயலாளர் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படை இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக இதே கடற்படை விமானம் மூலம் மார்ச் 25-ம் தேதி கோவாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள், கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்கான பயிற்சி பெற புணேவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com