இந்தியாவில் 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா: மத்திய நல்வாழ்வுத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா: மத்திய நல்வாழ்வுத் துறை


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நல்வாழ்வுத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டில் இதுவரை, 1,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 328 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது மற்றும் 12 பேர் இறந்துள்ளனர். 

இதுவரை கரோனா பாதித்து சிகிச்சை பெற்று 151 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன நலம் தொடர்பான கேள்விகளுக்கும் உதவிக்கும் 08046110007 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா தொற்று தொடர்பான அனைத்து தொழில் நுட்ப வழிகாட்டுதல்களும் மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் ( www.mohfw.gov.in ) பதிவேற்றப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com